தீபாவளிக்கு தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கம் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளிப் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் விரிவாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மண்மங்கலம் அருகே வாங்கலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பின்னர் செய்தியளார்களிடம் பேசினார்.

அப்போது, தீபாவளிப் பண்டிகையின்போது இயக்குவதற்காக போதிய பேருந்துகள் இருப்பதாகவும், தேவைக்கேற்ப தடையின்றி இயக்க அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். டீசல் விலை உயர்வின் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், எனினும் பேருந்துக் கட்டணம் உயராது என்று உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *