அமெரிக்காவின் அல்புகர்க் நகரில் பல்வேறு வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் வானில் பறந்த வெப்பக்காற்றுப் பலூன்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலத்தில் அல்புகர்க் நகரில் ஆண்டுதோறும் வெப்பக்காற்றுப் பலூன்கள் பறக்கவிடும் திருவிழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் 47ஆவது ஆண்டு பலூன் திருவிழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் பங்கேற்றுப் பல வண்ணங்களில் பல வடிவங்களில் பலூன்களை வானில் பறக்கவிட்டனர். காற்றில் மிதந்த பலூன்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

