காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்தில் 15 பேர் உயிரிழப்பு 19 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பணிஹாலில்  இருந்து ரம்பன்  என்ற இடத்துக்கு மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், கேல மோத்  என்ற பகுதியை அடைந்தபோது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

இந்த விபத்தில், 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.  ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் ஜம்முவில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *