மும்பையில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்த இளம் பெண் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு

மும்பையில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்து சக பயணிகளால் காப்பாற்றப்பட்ட இளம் பெண் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தானேயைச் சேர்ந்த இளம் பெண் கடந்த திங்கட்கிழமை மும்பையில் ரயில் ஒன்றில் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்தார். உடனடியாக சுதாரித்த சக பயணி அந்தப் பெண் அணிந்திருந்த சட்டையைப் பிடித்துத் தூக்கி காப்பாற்றினார்.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அந்தப் பெண் மீது ரயில்வே போலீசார் படிக்கட்டில் பயணம் செய்தலுக்கு எதிரான ரயில்வே சட்டம் 156-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *