ராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

சூடான் விமான நிலையத்தில் ராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

கர்டௌம்  விமான நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை வந்திறங்கிய இரண்டு ராணுவ விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன.

விபத்தில் இரு விமானங்களிலும் பயணித்த 8 பேர் காயமடைந்தனர். விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அங்கு வந்திறங்க வேண்டிய விமானங்கள் வேறு நிலையங்களுக்குத் திருப்பப்பட்டுள்ளன. விமானங்கள் இரண்டும் அதிகளவு சேதமடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *