ரூ 1000 கோடி செலவில் மகாபாரதத்தை திரைப்படமாக்க அமீர்கான் திட்டம்

நடிகர் அமீர்கான், மகாபாரதத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி இணை தயாரிப்பாளராக தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற பிரம்மாண்டமான படமாக இதனை தயாரிக்க அமீர்கான் திட்டமிட்டுள்ளார்.

அண்மையில் சீக்ரட் சூப்பர் ஸ்டார் படத்தின் அறிமுக விழாவில் பேசிய அமீர்கான், மகாபாரதத்தை திரைப்படமாக எடுப்பது தனது கனவு என்றும், கர்ணன் பாத்திரத்தில் தாம் நடிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். உடல்வாகு காரணமாக கர்ணன் பாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனால் கிருஷ்ணராக நடிக்க விரும்புவதாகவும் அமீர்கான் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *