தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் ‘துணைவேந்தர்’ நியமனத்திற்காக நீதிபதி ஜெகதீசன்தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக்குழு, குழுவிற்கு வந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, அதில் முதல் மூன்று இடத்தில் வந்தமுனைவர் வின்செனட் காமராஜ், முனைவர். டேவிட் அம்புரோஸ், முனைவர். பாலு ஆகியோரின் பெயர்களை தேர்வு செய்து தமிழ்நாடுஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. தேர்வுக்குழு பரிந்துரைத்த மூன்று பெயர்களையும் தவிர்த்துவிட்டு முனைவர் சூரியநாராயணசாஸ்திரி என்பவரை சட்டப்பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்படுவார் என செய்தி வெளியாகியுள்ளது.
2009 காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பல்கலைக் கழகத்தில் இளநிலை சட்டக்கல்விஇயக்குநராக பணிபுரிந்தவர். அப்போது அவர்மீது வந்த புகார் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர். பின்னர் புனேபல்கலைக் கழகத்திற்கு சென்று பணிபுரிந்து வருகிறார். அங்கும் இவர் மீது குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர், பாலியல் சீண்டலில்ஈடுபடுபவர் என்பது உட்பட பல்வேறு புகார் எழுந்துள்ளன. சமஸ்கிருத மொழி வெறியர். இவர் எந்தவகையிலும் சட்டப் பல்கலைக்கழகத்தில் ‘துணைவேந்தர்’ பொறுப்புக்கு தகுதியற்றவர் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின்ஆசி பெற்றவர், பிரதமர் அலுவலகத்தில் செல்வாக்கு பெற்றவர் என்ற காரணத்தால் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின்துணைவேந்தராக நியமிக்கும் படி அழுத்தம் தரப்படுகிறது.
உயர்மதிப்பு வாய்ந்த டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு முனைவர் சூரிய நாராயண சாஸ்திரியைதுணைவேந்தராக நியமிப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக எதிர்க்கிறது. அவரை நியமனம்செய்யக் கூடாது என தமிழ்நாடு ஆளுநரை வலியுறுத்துகிறது.

