மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ராமராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ராமராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் சதிநோக்கத்துடன் ராமராஜ்ய ரத யாத்திரையை நடத்துவதாகக் குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *