தமிழகத்தில் மதவாதத்தை தூண்டும் விதமாக ரத யாத்திரைக்கு அனுமதி அளித்த மத்திய மாநில அரசுக்கு கண்டம் தெரிவித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா அவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்தும் நிபந்தனையின் உடனே விடுதலை செய்ய கோரியும் ரத யாத்திரையை உடனே தடுத்து நிறுத்த கோரியும் திருத்தணி பேருந்து நிலையம் அருகில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட விடுதலைச்சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து பின்னர் திருமண மண்டபத்தில் அடைத்தனர்… தொகுதி செயலாளர் ஆனந்தன் மாவட்ட இளைஞர் அணி துனைசெயளாளார் ஆறுமுகம் நகர பொறுப்பாளர் தண்டபாணி மாவட்டம் தொழிற்சங்க தலைவர் குமார் ஒன்றிய ஒருகிணைப்பளார் ஆறுமுகம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

