பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகள் கூறுவார்கள் அதை பற்றி நாங்கள் பொருட்படுத்தவில்லை.
ரத யாத்திரை காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் சென்றது கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திலும் சென்றது , அங்கு சென்ற அடையாளம் தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தில் இதனை அனைவருக்கும் தெரியபடுத்தியது திமுகவினரும், திமுக வுடன் போராடியவர்களும் தான்.
தமிழக மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று , வாக்களர்கள் குழந்தைகள் அல்ல ..
அம்மாவின் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.
தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.
மறைந்த நடராஜன் உடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என முடிவெடுத்துள்ளோம் நாங்கள் போய் மரியாதை செலுத்தினால் அதனை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.
அதனடிப்படையிலே யாரும் செல்லவில்லை அதே சமயம் அந்த குடும்பம் ஜெ.வால் புறக்கணிக்கப்பட்ட குடும்பம்.
திமுகவினர் மரியாதை செலுத்த சென்றார்கள். ஏன் என்றால் பிற்காலத்தில் அவர்களுக்கு எதாவது உதவி வேண்டும் என இருக்கலாம்.
ஒரு ரத யாத்திரை சாலையில் செல்வதால் மக்கள் மனம் மாறிவிடாது.
இதனால் அவர்களால் ஆட்சியை பிடித்துவிட முடியாது…

