2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வழக்கில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
ஏழு மாதம் காலமாக நடந்து வந்த இந்த வழக்கில், உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் வாக்குமூலம் அளித்தவர்கள் மாறுபட்ட முரண்பாடாக கூறியிருந்ததாகவும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பளித்தார்
இதனால், காங்கிரஸ் மற்றும் திமுகவினர் பட்டாசு வெடித்து கோலகலாமாக கொண்டாடினர். கனிமொழியும், ஆ.ராசாவும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றனர்.
இந்நிலையில், 2ஜி வழக்கில் ஆ.ராசா , கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
2018-03-19

