எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரும் போது தனித்தன்மையுடன் வந்தார். ரஜினி, எம்.ஜி.ஆர். முகமூடி அணிந்து வரவேண்டாம் என்று இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கரு.பழனியப்பன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்….
“எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரும் போது தனித்தன்மையுடன் வந்தார். ஆனால் ரஜினியோ, எம்.ஜி.ஆர். முகமூடியை அணிந்து கொண்டு அரசியலுக்கு வருகிறார். நீங்கள் ரஜினியாகவே அரசியலுக்கு வாருங்கள்.
வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வருவதாக சொல்கிறீர்கள். எம்.ஜி.ஆர். வரும்போது எந்த வெற்றிடமும் இல்லை. அவர் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். ஆன்மீக அரசியல். ஜாதி, மத, இன பேதமற்ற அரசியல் என்கிறீர்கள். சாதி அரசியல் நடத்துபவர்களை அருகில் வைத்துக் கொண்டால் அது எப்படி சாத்தியமாகும்?
நீங்கள் நடித்துள்ள ‘காலா’ படம் வந்தால் முதல் ஆளாக படம் பார்ப்பேன். நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறவில்லை. வாருங்கள். ஆனால், என் ஓட்டு யாருக்கு என்பதை நான் தான் முடிவு செய்வேன்” என்று கூறியுள்ளார்

