மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் அலங்கார பொருட்கள் கடை, புத்தக கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், நேற்றிரவு அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனிடையே தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டார்.
தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் கடைகள் வைக்க அனுமதி வழங்க கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

