தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்பிரிக்கா 194 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கி இந்திய அணி 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி 177 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்ரிக்கா அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *