மக்களை முட்டாளாக்க தமிழக அரசு முயற்சி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக பேருந்து கட்டணத்தை உயர்த்திய ஆட்சியாளர்களுக்கு ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட எங்கிருந்து பணம் வருகிறது என்று கேள்வி எழுப்பினார். உச்சநீதி மன்றம் குறித்து பேசியதற்கு முன்னாள் நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுத்த நீதிமன்றம் தற்போது, உச்சநீதிமன்றம் குறித்து கருத்து கூறிய 4 நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *