இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், 20ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. 3போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் ஜோகனஸ்பர்க்கில் நடைபெறும் மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 187ரன்களில் சுருண்டது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள் என்கிற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 194 ரன்களில் ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் 7ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 49ரன்கள் எடுத்துத் தென்னாப்பிரிக்க அணியைவிட 42ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முரளி விஜய் 13ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 16ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
2018-01-26

