சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். அதேநிகழ்வில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது விஜயேந்திரர் எழுந்து நின்றார். இதுகுறித்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, விஜயேந்திரரின் செயல் தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
திருச்சி மணப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், விஜயேந்திரர் தமிழை இழிவுபடுத்தியதற்கு வருத்தம் தெரிவிப்பது தான் நல்லது என்று கூறினார்.

