குல்பூஷன் ஜாதவ் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் தங்கள் தரப்பு வாதங்களை தாக்கல் செய்ய சர்வதேச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம், ஜாதவ் மரண தண்டனைக்கு தடை விதித்தது. இந்நிலையில் குல்பூஷன் ஜாதவ் வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி இந்தியா தமது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவேண்டும் எனவும், ஜூலை 17ம் தேதி பாகிஸ்தான் தமது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவேண்டும் எனவும், சர்வதேச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

