ஏழைகளின் அரசாக இருந்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கும்… நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு;

பேருந்து கட்டண உயர்வை அரசு நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தமது டுவிட்டர் பதிவில் பேருந்து கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் ஏழைகளுக்கானதாக இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கும் என்றும், முடிவு எடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாமர்த்தியம் எனவும் கமல் கருத்து தெரிவித்துள்ளார். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே என அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *