யாராலும் திராவிட இயக்கத்தை தொட்டு பார்க்க முடியாது… திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்;

எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட்டு கூட பார்க்க முடியாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், கடவுள் என்று ஒன்று இருந்தால், திமுகவினருக்கு அது பேரறிஞர் அண்ணா தான் என்று கூறினார். ஒரே இரவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களை இன்னலுக்கு ஆளாக்கிய தமிழக அரசின் செயல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட மோசமானது என்று அவர் குற்றம் சாட்டினார். எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட்டு கூட பார்க்க முடியாது எனவும் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *