இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜீவாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன், மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நல்லக்கண்ணு, வைரமுத்து மீதான ஹெச்.ராஜாவின் விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருது பெற்றது ஆச்சர்யமாக தான் இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.
பின்னர் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் மரணம் குறித்து மத்திய அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

