ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரரின் உடல் கோவை வந்தடைந்தது ராணுவ வீரர் சுரேஷின் குடும்பத்திற்க்கு ரூ. 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் சுரேஷ் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஜம்மு காஷ்மீரின் ஆர். எஸ். புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் புதனன்று இரவு அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டியைச் சேர்ந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் சுரேஷ் உயிரிழந்தார். இதனையடுத்து விமானம் மூலம் அவரது உடல் நேற்று இரவு கோவை வந்தடைந்தது. இந்நிலையில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் சுரேஷ் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுரேஷின் மரண செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையும், துயரமும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *