தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் மலையோரப் பகுதிகளில் உறைபனி காணப்படும் எனவும் குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் மலையோரப்பகுதிகளில் சில இடங்களில் உறைபனி காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிலநேரம் மேகமூட்டமாக இருக்கும் என்வும் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2018-01-16

