செஞ்சூரியனில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்காவை விட 28 ரன்கள் பினதங்கியுள்ளது.

இந்தியா தென்ஆப்பிரிக்கா இடையிலான 2 வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 335 ரன்னில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 2 வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா 28 ரன்கள் பினதங்கிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *