நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விழா புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், கடினமான மனநிலையில்தான் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கையால் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் செலவினங்களை குறைக்கும் விதமாக நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

