தைத் திருநாளின் 2ம் நாளான இன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கலைத் தொடர்ந்து வருவது மாட்டுப் பொங்கல். இந்த நாளில் உழவர் நண்பர்களாக விளங்கும் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து விவசாயிகள் அதனை கடவுளாக வழிபடுவர்.
முன்னதாக உழவர் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் விவசாயிகளை போற்றும் விதமாக பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து வீட்டில் புதுப்பானையில் புத்தரிசியிட்டு வீட்டின் முன்பு கோலமிட்டு பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். தொடர்ந்து கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடும் நடத்தினர். மேலும் ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொங்கலை முன்னிட்டு ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பானையடி, கயிறு இழுத்தல், கோணிப்பை போட்டி, குச்சி விளையாட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளும் நடைபெற்றன. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அனவரும் ஒன்றுகூடி 251 பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடினர். இதில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் கலந்து கொண்டனர்.
இதேபோல், தஞ்சை மாவட்ட்தில் நடைபெற்ற பொங்கல் விழாக்களிலும் வெளிநாட்டினர் பெருமளவில் கலந்து கொண்டனர். ,அவர்கள் கலை நிகழ்ஃசிகளிலும் பங்கேற்று மகிழச்சியை வெளிப்படுத்தினார்.
இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ்மக்கள் வசித்துவரும் உலகின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து பிதமர் மோடி தமது டுவிட்டரில் பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்றும் இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் என்றும் பிரமர் தனது டிவிட்டரில் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
இதேபோல், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், பொங்கல் விழாவில் தமது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழுமை கிடைத்திட வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தம்மை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு தனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

