ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பன்னாட்டு அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரும், ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பர்தியும் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 3க்கு 2 என ஜெர்மனி வீராங்கனை கெர்பர் முன்னிலைப் பெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து முதல் செட்டின் முடிவில் 6க்கு 4 என்ற செட் கணக்கில் முதல் செட்டில் தொடர்ந்து முன்னிலை பெற்றார். பின்னர் நடைபெற்ற இரண்டவது செட்டிலும் 6க்கு 4, என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஸ்லே பர்தியை வீழ்த்தி வெற்றிபெற்றுப் பட்டத்தைக் கைப்பற்றினார்.
2018-01-14

