தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள்காட்டியிருந்ததாகவும், அந்த கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையை வைத்துக்கொண்டு ஆண்டாளை அவதூறு செய்துவிட்டதாக கவிஞர் வைரமுத்துவின் மீது எச்.ராஜா பழிபோட்டுப் அநாகரிகமாக பேசிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எச்.ராஜாவின் பேச்சு சாதி – மதவெறியை கொண்டதாகவும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும், பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ள தொல்.திருமாவளவன், எச்.ராஜாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். எச்.ராஜா ஏற்கனவே தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசிப் பதற்றத்தை உருவாக்கியதை குறிப்பிட்டுள்ள அவர், இடதுசாரி இயக்கங்களை அவதூறு செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்த எச்.ராஜா, தற்போது கவிஞர் வைரமுத்துவும், அவரது கட்டுரையை வெளியிட்ட நாளேடும் வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு பரப்பி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். எச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியபோது மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், இடதுசாரிகளை இழிவு செய்தபோது ஏனையோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைச் சிறுத்தைகளை வம்புக்கு இழுத்தபோது ஓரிருவரைத்தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் மவுனம் காத்தனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசு வேடிக்கை பார்ப்பதால் மேலும் மேலும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் எச்.ராஜா பேசி வருவதாக தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துவதாக எழுச்சிதமிழர் கூறியுள்ளார். இத்தகைய வெறுப்புப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும் என குறிப்பிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Card: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
· கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்
· அக்கட்டுரையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள்காட்டியிருந்தார். அந்த கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை
· ஆண்டாளை அவதூறு செய்துவிட்டதாக கவிஞர் வைரமுத்துவின் மீது எச்.ராஜா பழிபோட்டுப் அநாகரிகமாக பேசிவருகிறார்
· எச்.ராஜாவின் பேச்சு சாதி – மதவெறியை கொண்டதாகவும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும், பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் உள்ளது
· எச்.ராஜாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
· எச்.ராஜா ஏற்கனவே தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசிப் பதற்றத்தை உருவாக்கினார்
· இடதுசாரி இயக்கங்கள் மீது எச்.ராஜா அவதூறு பரப்பினார்
· நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்த எச்.ராஜா, கவிஞர் வைரமுத்துவும், அவரது கட்டுரையை வெளியிட்ட நாளேடும் வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு பரப்பிவருகிறார்
· எச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியபோது மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை
· இடதுசாரிகளை இழிவு செய்தபோது ஏனையோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
· விடுதலைச் சிறுத்தைகளை வம்புக்கு இழுத்தபோது ஓரிருவரைத்தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் மவுனம் காத்தனர்
· அரசு வேடிக்கை பார்ப்பதால் மேலும் மேலும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் எச்.ராஜா பேசி வருகிறார்
· எச்.ராஜாவின் பேச்சு தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது
· எச்.ராஜாவின் வெறுப்புப் பேச்சை பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும்
· தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

