சிவகாசியில் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவகாசி பட்டாசு பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 22ம் தேதி இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடி பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பின்னர் விமான நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் உறியடித்து அவர் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

