தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலின் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் ஈரப்பதமான காற்றால் தமிழகம், புதுவையின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி,நெல்லையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *