குட்கா முறைகேடு விவகாரத்தை விசாரணை அதிகாரியைக் கொண்டு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு மின்நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயக்கொடி, லஞ்ச ஒழிப்பு துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். குட்கா முறைகேடு தொடர்பாக அவர் விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீரென மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, நிலநிர்வாக ஆணையராக இருந்த மோகன் பியாரே லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து திமுக சார்பில் தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், லஞ்ச ஒழிப்பு துறை ஆணையராக மோகன் பியாரேவை நியமித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
2018-01-12

