2019ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை நிச்சயம் காங்கிரஸ் வீழ்த்தும்; காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டம்….

2019ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ராகுல்காந்தி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பக்ரைன் நாட்டுக்கு சென்ற ராகுலுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மன்னர் குடும்பத்தினரை சந்தித்து ராகுல்காந்தி உரையாடினார். பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் சக்தி காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் உண்மைகளை கொண்டு பொய் பிரச்சாரங்கள் அடித்து நொறுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *