போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைக்கு தமிழக அரசு சுமூக முடிவு காண வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மீண்டும் அறிவிக்கப்பட்ட திருநாவுக்கரசரை அவரது இல்லத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மீண்டும் திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டதையொட்டி, மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறியதாக தெரிவித்தார்.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நியாயமானது என்று தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைக்கு தமிழக அரசு சுமூக முடிவு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து பேச தயக்கம் காட்டுவதால் போராட்டம் தீவிரமடைகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

