தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் நடிகர் கமலஹாசன் மீது தான் வழக்குத் தொடரப் போவதில்லை என்றும், அவரை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார். ஆர்.கே. நகர் தொகுதி பிரச்னைகள் நீட் தேர்வு, கூடங்குளம் அணு மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2018-01-07

