தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நீடிப்பார் திருநாவுக்கரசர்; காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசரே நீடிப்பார் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி கடந்த மாதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ராகுல்காந்தி தலைவர் பொறுப்பேற்ற பிறகு கட்சி நிர்வாகிகளை மாற்றம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து மாநில தலைவர்களும் அதே பொறுப்பில் நீடிப்பார் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஜனார்தன் த்விவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் , அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அவரவர் பொறுப்பிலேயே நீடிப்பார்கள் என ராகுல்காந்தி முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசரே நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *