சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் 4ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலக தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இவ்விழாவில் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டில் அதிகமான ஆங்கில பள்ளிகள் உருவெடுப்பதற்கு வேதனை தெரிவித்தார். மேலும் இந்தியாவின் ஆட்சி பீடத்தில் தமிழன் அமரும் போது தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழியாகும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கு தீங்கானதை எதிர்த்து போராடுவதே தமிழ் தேசியம் என்றும், அன்னை தமிழை காப்போம், அனைத்து மொழிகளையும் மதிப்போம் என்றும் அவர் கூறினார்.

