சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் அரசின் சார்பில் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக 7பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

