மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி, தமிழகத்தில் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காதது ஏன் என, தி.மு.க. செயல்தலைவர் மு. க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 2,000 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுமென 2015-2016 ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப்படுமென 2017-18 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு செயல்வடிவம் பெற்றுவிட்டதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கொண்டு வர முடியாமல் அ.தி.மு.க. அரசு செயலிழந்து நிற்பதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

