திராவிட இயக்கத்தை யாராலும் அழித்து விட முடியாது; திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி…

திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தால் தோல்வி தான் கிடைக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் கருணாநிதியைச் சந்தித்தது அதிசயமான ஒன்றல்ல எனத் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்கும் போதும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார். ஆன்மீக அரசியல் என்ற பெயரால் பலரால் தூண்டப்பட்டு ரஜினிகாந்த் கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படுவதாகவும், திராவிட இயக்கத்தை அப்படி யாராலும் அழிக்க முடியாது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தி.மு.கவின் ஆதரவு ரஜினிக்கு தேவையா என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *