முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் தினமும் ஏராளமானோர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள். இந்நிலையில், ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக டிடிவி தினகரன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப் பட்டிருந்தது. இதையடுத்து அவர் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகி ஒரு பென் டிரைவை வழங்கி விளக்கம் அளித்தார்.
இதனிடையே, இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா சேப்பாக்கத்தில் உள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராகி ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பற்றி விளக்கம் அளித்தார்.

