இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக 9 ஆயிரத்து 860 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் வெறும் 7 சதவீதத் தொகை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சீனா நம்மை முந்திச் சென்று கொண்டிருப்பதாகக் கூறியுள்ள ராகுல், பிரதமர் மோடி வெற்று வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் அஸ்திவாரமான அரசியல் சாசனமே அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
2018-01-01

