கோவை மாவட்டம் குனியமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டிடிவி தினகரனை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை மாலுமிகளாக கொண்ட கப்பல் மூழ்கி விட்டதாகவும் புகழேந்தி கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் அனாதை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
2017-12-27

