இலங்கை அணியுடனான 20ஓவர் போட்டித் தொடரை இந்திய அணி வென்றதன் மூலம், ஐசிசி தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை அணியுடனான 20ஓவர் போட்டித் தொடரை இந்திய அணி 3க்கு 0 என்ற கணக்கில் வென்றது. இந்தப் போட்டித் தொடருக்கு முன் இந்திய அணி தரவரிசையில் 119 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் இருந்தது. தொடரை வென்றதன் மூலம் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளையும் முந்தி இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் விராட் கோலி ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்திலும் டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் இரண்டாமிடத்திலும் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *