குஜராத் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய் ரூபானி; பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்…..

குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேலும் இன்று பதவியேற்று கொள்கின்றனர்.

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக விஜய் ரூபானி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து விஜய் ரூபானி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. குஜராத் காந்தி நகரில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் 18 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *