குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி; ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி வரவேற்கத்தக்கது என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கருத்து ……

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வத்காம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் வத்காம் தொகுதியில் சுயேட்சையாக தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி போட்டியிட்டார். இவர் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவருக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவும் இருந்தது. ஜிக்னேஷ் மேவானி வத்காம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்ததையடுத்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அங்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதனால் வட்காம் தொகுதியில் பாஜகவுக்கும் ஜிக்னேஷ் மேவானிக்கும் நேரடி போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை தோற்கடித்து ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *