கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே தென் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியமும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2017-12-17

