இலங்கையை ஒட்டி நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குமரிக் கடல் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகத்தை பொறுத்த வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் சென்னையை பொறுத்த வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், புறநகர் பகுதிகளில் காலை வேளைகளில் மூடுபனி காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2017-12-15

