மும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த், காவலர்கள் பிடியில் இருந்து தப்பியோடினார்.

சென்னை அடுத்த மாங்காட்டில் 6 வயது சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து எரித்து கொடூரமாக கொலை செய்த தஷ்வந்த் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்தார். தமது வீட்டை குன்றத்தூருக்கு மாற்றிய அவர், அவரது பெற்றோருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை தனது தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திமடைந்த தஷ்வந்த், தமது தாய் சரளாவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். மேலும் வீட்டில் இருந்த 25 சவரன் நகைகளுடன் தப்பி ஓடினார். இதையடுத்து மும்பையின் பாந்த்ரா பகுதியில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை தமிழக காவல்துறையினர் சுற்றி வளைத்து நேற்று முன் தினம் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட தஷ்வந்த், நேற்று மும்பையில் காவலர்களிடம் இருந்து தப்பியோடினார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *