ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்கம் மாவட்டத்தில் உள்ள பாஹெர்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. சில மணி நேரங்கள் நீடித்த இந்த சண்டையில் நான்கு தீவிர வாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு வீரர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கி சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதா கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2017-12-01

