உடல் உறுப்பு தானம் செய்ய அனைவரும் வாருங்கள் என பொதுமக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்துள்ள லால் பரேட் மைதானத்தில் சத்குரு கபீர் மகோத்சவம் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், சத்குரு கபீரின் போதனைகளை மக்கள் தங்களது வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் அனைவரும் உடல் தானம் மற்றும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ராம்நாத் கோவிந்த், இப்படி செய்வதால் மற்றவர்களின் வாழ்வை வளமாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

